Tuesday, 24 January 2017

Madraskaaran

அமைதிப் போராட்டம் வரலாறு காணாத வெற்றி கண்டது. ஏழு நாட்கள் அமைதி காத்த காவல்துறை அரை நாள் பொறுக்காதது ஏன் என விளக்க யாருக்கும் நேரம் இல்லை நன்றி தெரிவிப்பதில் அனைவரும் மூழ்கியிருந்தனர். அமைதிப் போராட்டம் போர்க்களமானது. அந்தப் போர்க்களத்தில் நுனிநாக்கு ஆங்கிலமும், தமிழ் கலந்த ஆங்கிலமும் பேசிய வீரர்களைக் காணவில்லை .தன் வாழ் நாளில் ஜல்லிக்கட்டே பார்த்திராத சென்னை தமிழ் மட்டுமே தெரிந்தவன் விஷமி எனப் பெயர் சூட்டப்பட்டு போலீசாரின் ஏழு நாள் விரதம் முடித்து வைக்கும் கடா வெட்டின் பலி. திருவல்லிக்கேணி வீதிகளில் காளைகள் எந்நாளும் சீறிப்பாயப் போவதில்லை.அயோத்திகுப்பத்தில் வாடிவாசல் ஒரு நாளும் திறக்கப் போவதில்லை. இருந்தும் அவன் போராட்டத்தில் துணை நின்றான் – உணவளித்தான் – தோள்கொடுத்தான்.அவனை இன்று விஷமி என்று சொல்லி நாம் ஒதுங்கிக் கொண்டோம். அவன் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. கானா பாடி மகிழ்பவன் அவன்.இதற்கும் ஒரு கானா பாடி வைத்து விட்டு, அடுத்த போராட்டத்திற்கு மெரினாவில் உங்களுடன் இருப்பான். அவன் தான் மெட்ராஸ்காரன்

No comments:

Post a Comment